
2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் பாமக இடம் பெறும் என்பது டிசம்பர் 30ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என அக்கட்சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
ராமதாஸ் தலைமையிலும் அன்புமணி தலைமையிலும் பாமக இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளன. ராமதாஸ், பாமகவுடன் அதிமுகவும் அன்புமணி பாமகவுடன் பாஜகவும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. ராமதாஸ் பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அன்புமணி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், சேலம் ஆத்தூரில் பாமகவின் பொதுக்குழுவை டிசம்பர் 30ஆம் தேதி கூட்டியுள்ளோம். அந்த பொதுக்குழுவில் கூட்டணி குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுக அரசைக் கண்டித்து டிசம்பர் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாமக சார்பில் போராட்டம் நடைபெறும் என்றார்.