தமிழ் நாடு

இன்று ஒரு சொல் - கோடை
பொருள் விளக்கம்:
1. மேல்காற்று. கோடை தூற்றக் கூடிய வூழிலை (ஞானாமிர்தம்).
2. வேனிற் காலம். (பிங்கல நிகண்டு)
3. வெயில். வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப (திருவாசகம்)
4. கோடைப் பயிர்
5. மலை- கோடைக்கானல். வெள்வீ வேலிக் கோடைப் பொருந (புறநானூறு)
6. குதிரை. (பிங்.)
7. கோடு (திவாகர நிகண்டு)
8. கோடல்
9. வெண்காந்தள்
10. செங்காந்தள்.