தமிழ் நாடு

இன்று ஒரு சொல் - இமிழ்
பொருள் விளக்கம் :
1. ஒலி - இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய (சிலப்பதிகாரம்)
தெரியிமிழ் கொண்டநும் மியம்போ லின் னிசை (மலைபடுகடாம்)
புள்ளின மிமிழும் புகழ்சால் விளைவயல் (புறநானூறு)
2. பிணைப்பு; அன்பு அல்லது பற்றினாலான உறவு
இமிழ்கொளு மன்பு (திருவானைக்காவுலா)
3. கயிறு - சொல் லிமிழிற் பூட்டி (சீவகசிந்தாமணி)
4. இசை
5. மிகுதல்
6. இனிமை
7. சிமிட்டல்
8. தழைத்தல் - மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின் (பதிற்றுப்பத்து)