தேங்கும் நீரை அகற்றாத ஆலைகளுக்கு ரூ. 10,000 அபராதம்!

Minister Arunraj
அமைச்சர் அருண்ராஜ்
Published on

தேங்கும் நீரை முறையாக அகற்றாத தொழிற்சாலைகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், விழித்திரை காப்போம் திட்டம் குறித்த முன்வெளியீட்டு நிகழ்வை மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மருத்துவக் கல்வி பொறுப்பு இயக்குநர் லோகநாயகி, மருத்துவமனை டீன்கள் சாந்தாராமன், அரவிந்தன், ஹரிகரன், கவிதா உட்பட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், "பருவகால மாற்றத்தால் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும், தொடர்ந்து டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பொதுமக்கள், அரசுடன் ஒத்துழைத்து இந்த நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், தேங்கும் மழைநீரை முறையாக அகற்றாத தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும்." என்று கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com