என்ன நோக்கம்... இலங்கை மீனவர்கள் 3 பேரிடம் தீவிர விசாரணை!

Inquiry with 3 srilankan fishermen intruded in indian waters
இலங்கை மீனவர்கள் 3 பேரிடம் தீவிர விசாரணை
Published on: 

எல்லைமீறி இந்தியக் கடற்பரப்பில் நுழைந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டனர். 

பைபர் படகில் வந்த அவர்களை, இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் எல்லையில் வைத்து இந்தியக் கடலோரக் காவல்படையினர் கைதுசெய்தனர். 

இயந்திரக் கோளாறு காரணமாக படகு இந்தியக் கடற்பரப்பில் தவறுதலாக நுழைந்துவிட்டது என்று அவர்கள் கூறினார்கள். 

கடலோரக் காவல்படையினர் அவர்களை மண்டபம் முகாமுக்குக் கொண்டுசென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

உண்மையிலேயே தவறுதலாக இந்தியக் கடற்பரப்புக்குள் நுழைந்தார்களா, அவர்களின் பின்னணி என்ன, வேறு ஏதேனும் நோக்கத்தில் வந்தவர்களா என அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.    

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com