தமிழ் நாடு

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் முனைவர் சு.இராஜகோபால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 76.
மூப்பு, உடல்நிலை காரணமாக இன்று முற்பகலில் அவர் உயிரிழந்தார்.
தமிழக அரசின் தொல்லியல் துறையில் பல பத்தாண்டுகளாகப் பணியாற்றிய அவர், தொல்லியல் கழகத்தின் 'ஆவணம்’ இதழின் ஆசிரியராகவும் கடைசிவரை பணியாற்றி வந்தார்.
இருபத்து ஒன்பது நூல்கள், அறுபதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
’திசையாயிரம்’ எனும் தலைப்பில் இவருக்கான பணிப் பாராட்டு நூலை, பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் கடந்த ஆண்டு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.