’பெரியார் அறிவுலக மோசடி: விசாரணை ஆணையம் உடனே அமையுங்கள்!’ எழுத்தாளர்கள் கூட்டறிக்கை

கோவை பெரியார் அறிவுலகம்
கோவை பெரியார் அறிவுலகம்
Published on: 

கோவையிலுள்ள பெரியார் நூலகத்தில் போலிநூல்கள் இடம்பெற்றிருப்பதற்கு கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 அந்த அறிக்கையில் “போலியான  எழுத்தோளர்களைக் களமிறக்கியுள்ள இந்த முறைகேட்டினால் மெய்யான எழுத்தாளர்களின் ஆய்வாளர்களின் நூல்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மேலும் இது, அவர்களின் பங்களிப்புகளை இருட்டடிப்புச் செய்து பொதுவெளியிலிருந்து அவர்களை அகற்றுவதற்கு ஒப்பானதொரு தீங்குமாகும்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த முறைகேட்டை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பிலான விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படவேண்டும்.

தேவையான திருத்தங்களுடன் வெளிப்படைக் கொள்முதல் கொள்கை 2024 வலுப்படுத்தப்படவேண்டும் உள்பட பல கோரிக்கைகளை இந்த கூட்டறிக்கையில் வைத்துள்ளனர்.