"மக்கள் பணியில் பங்கு கேட்டால் சதியா…?" - மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர் எம்.பி.
மாணிக்கம் தாகூர் எம்.பி.
Published on

“தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்” என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்ட நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக காங்கிரஸின் சில தலைவர்கள் ‘ஆட்சியில் பங்கு’ வேண்டும் என்று திமுகவை வலியுறுத்தி வருகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாணிக்கம் தாகூர், பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோர் நேரடியாகவே திமுவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினோ, ஆட்சியில் பங்கு என்ற வாதம் தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இருந்தலும் மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

“மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா்? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006-யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தவறு” என்று நேற்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் மாணிக்கம் தாகூர் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மீண்டும் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com