பழனிவேல் தியாகராஜனை துறை மாற்ற இதுதான் காரணமா?- முதல்வர் விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழனிவேல் தியாகராஜன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழனிவேல் தியாகராஜன்
Published on

பழனிவேல் தியாகராஜனை துறை மாற்றியது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் இரண்டு நாள் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகம் மையத்தில் நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டை மனிதவளத் தலைநகரமாக மாற்றுவேன் என்றா.

மேலும், நிதித் துறையிலிருந்து பழனிவேல் தியாகராஜனை தகவல் தொழில் நுட்பவியல் துறைக்கு அமைச்சராக்கியது ஏன் என்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

“நம்முடைய ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகளில் நிதியமைச்சராக மிகச் சிறப்பாகச் செயல்பட்டவர் பழனிவேல் தியாகராஜன். அவரை நான் தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கு மாற்றினேன். அவரை மாற்றியதற்குக் காரணம், தகவல் தொழில்நுட்பவியல் துறை யிலும் மாற்றங்கள் தேவைப்பட்டது. அவருடைய தலைமையில் தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக தமிழ்நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும்” என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

logo
Andhimazhai
www.andhimazhai.com