தமிழ் நாடு

தலைநகரின் பழமையான பேருந்துநிலையமான பிராட்வே பாரிமுனை பேருந்துநிலையம் இன்றுமுதல் மூடப்படுகிறது. இதற்குப் பதிலாக தீவுத்திடல், இராயபுரம் ஆகிய இடங்களில் தற்காலிகமான பேருந்துநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் இந்த நிலையங்களைத் திறந்துவைத்தார்.
பிராட்வே பேருந்துநிலையத்தை 800 கோடி ரூபாய் செலவில் புதிய, நவீன நிலையமாகவும், பல்வேறு கூடுதல் வசதிகளுடனும் கட்டுவதற்கான பணி தொடங்கப்படவுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு அடிக்கல் நாட்டுகிறார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இரண்டு புதிய தற்காலிக பேருந்துநிலையங்களிலும் எந்தெந்த வழித்தடங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படும் எனும் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.