உதயநிதி, மு.க.ஸ்டாலின்... தாராபுரத்தில் ஆகாத பேச்சு!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on: 

தி.மு.க. சட்டப்பேரவைக் குழுத் தலைவர் உதயநிதி கடந்த வாரம் பேசியது சர்ச்சை ஆனநிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசியதும் பலத்த சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. 

தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் கடந்த மாதம் 26ஆம் தேதியன்று உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, தலைமைச்செயலகம் கட்டும் திட்டத்தைப் பற்றி விமர்சித்த அவர், கடலைப் பார்த்தபடி தலைமைச்செயலக அலுவலகம் இருக்கவேண்டும் என்பதற்காக முதலமைச்சர் விஜய் மீனவர் குடியிருப்புகள் இருக்குமிடத்தில் கோட்டை கட்ட நினைக்கிறார்; கடலைப் பார்த்தால்தான் அவருக்கு மூடு வருமாம் என்று இரட்டுறமொழிதலாகப் பேசினார்.

உடனே, கீழே இருந்த தொண்டர் ஒருவர் ஏதோ சொல்ல, ”நான் அதைச் சொல்லலப்பா... நீ ஏதாவது சொல்லிட்டுப் போயிடுவ...நான்தானே வழக்கை வாங்கணும். அவர் வேலைபாக்கிற மூடு பத்திதான் நான் சொன்னேன்.” என்று உதயநிதி மேலும் விளக்கம் அளித்தார்.

அதைத் தொடர்ந்து, அவருடைய தந்தை மு.க.ஸ்டாலின் தாராபுரம் தொகுதி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், த.வெ.க.வுக்குத் தாவிய முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்தியபாமாவைப் பற்றிக் குறிப்பிட்டு, அவரை பெட்டி பாமா, பல்டி பாமா என மக்கள் குறிப்பிடுவதாகவும் சொன்னார்.

அத்துடன், அவர் அந்த உடம்பை வைத்துக்கொண்டு எப்படி பல்டி அடித்தாரோ என்று ஸ்டாலின் பேசியதும் நேரலையில் அதிர்வலைகளை உண்டாக்கியது.

பல்வேறு தரப்பினரும் அவருடைய இந்தக் குறிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com