த.வெ.க.வுக்கு ஆதரவு இல்லை- முஸ்லிம் லீக்

த.வெ.க.வுக்கு ஆதரவு இல்லை- முஸ்லிம் லீக்
Published on: 

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கப்போவதில்லை என இணந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 

ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கோரி இடதுசாரிகள், முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்களிடம் த.வெ.க. சார்பில் இன்று நேரில் கோரிக்கை விடப்பட்டது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் உட்பட்ட தலைவர்களை த.வெ.க. இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் சந்தித்து முறைப்படி ஆதரவு கோரினார். 

இதைப் போல இன்னொரு நிர்வாகி அருண்ராஜ், முஸ்லிம் லீக் கட்சியின்தலைவர் காதர் மொகதீனை சென்னை, மண்ணடியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர், தி.மு.க. கூட்டணியில் இருக்கும் தாங்கள் த.வெ.க.வை ஆதரிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகக் கூறினார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com