எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்

நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறைத் தண்டனை: என்ன காரணம்?

பெண் பத்திரிகையாளர்கள், அவர்களின் ஆண் மேலதிகாரிகள் பற்றி அவதூறாக சமூக ஊடகத்தில் கருத்துவெளியிட்ட நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் பெண் பத்திரிகையாளர்கள், அவர்களின் ஆண் மேலதிகாரிகள் குறித்து அவதூறாகவும் இழிவாகவும் கருத்தைப் பதிவுசெய்த எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் பெண் பத்திரிகையாளர் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கும் தொடுக்கப்பட்டது.

அவ்வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.ஜெயவேல், எஸ்.வி.சேகர் மீதான குற்றாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூப்பிக்கப்பட்டுள்ளன எனக்கூறி, சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

அபராதத் தொகை ரூ. 15,000-ஐ நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் செலுத்தினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com