பிள்ளை பிடிக்கும் அண்ணாமலை…! – கலாய்த்த ஜெயக்குமார்

பிள்ளை பிடிக்கும் அண்ணாமலை…! – கலாய்த்த ஜெயக்குமார்

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பிள்ளை பிடிக்கும் வேலை செய்துவருவதாக அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் தொடங்கியது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

”தி.மு.க. குடும்ப அரசியல். அ.தி.மு.க.வில் அப்படி இல்லை. உழைப்பவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஜெயவர்த்தன் நிற்பது வாரிசு அரசியலில் வராது. ஏனென்றால், கடந்த 2014ஆம் ஆண்டு பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, அந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயவர்தன் போட்டியிட கையெழுத்து போட்டுள்ளார். அதனால், இது வாரிசு அரசியலில் வராது.” என்றார்.

அ.தி.மு.க.வில் இருந்து பலர் பா.ஜ.க.வில் இணைவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “உண்மையான தொண்டர்கள் அ.தி.மு.க.வில் நீடிக்கிறார்கள். பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பிள்ளை பிடிக்கும் வேலை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். அண்ணாமலையின் தாடியை பார்க்கும் போது மாயாண்டி பூச்சாண்டி மாதிரிதான் இருக்கிறது. பூச்சாண்டியை பார்த்து மற்ற கட்சிகள் பயப்படலாம். நாங்கள் பயப்பட மாட்டோம்.” என்றவரிடம் த்ரிஷா குறித்து முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி பேசியது குறித்த கேள்விக்கு, “ஒரு நடிகை பற்றி அப்படி பேசியிருக்கக் கூடாது. நடிகை திரிஷா எந்த அளவிற்கு மனம் கஷ்டப்பட்டு ட்வீட் போட்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி, நடிகை திரிஷா குறித்து பேசிய அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஜெயக்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com