சசிகாந்த் செந்திலுக்கு  பிரச்சாரம் செய்த ஜிக்னேஷ் மேவானி
சசிகாந்த் செந்திலுக்கு பிரச்சாரம் செய்த ஜிக்னேஷ் மேவானி

சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக ஜிக்னேஷ் மேவானி பிரச்சாரம்!

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த செந்தில் திருவள்ளூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தண்ணீர்குளம், ஆயலூர், கிளாம்பாக்கம், கோயம்பாக்கம், வதட்டூர், பேரத்தூர், வீராபுரம் தண்டலம், கல்யாணகுப்பம், காக்களூர் ஆகிய பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவரும் வதேகாம் சட்டமன்ற உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானி சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com