பியூஷ் கோயலை சந்தித்த ஜான் பாண்டியன், ஜெகன் மூர்த்தி.. NDA கூட்டணி கட்சிகள் லிஸ்ட்!

பியூஷ் கோயலை சந்தித்த ஜான் பாண்டியன், ஜெகன் மூர்த்தி.. NDA கூட்டணி கட்சிகள் லிஸ்ட்!
Published on

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக- பாஜக கூட்டணியில் (தேசிய ஜனநாயகக் கூட்டணி) அடுத்தடுத்து கட்சிகள் இணைந்து வருகின்றன.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கடந்த 2 நாட்களாக சென்னையில் முகாமிட்டு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கூட்டணியை உறுதி செய்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போதைய நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக(அன்புமணி), அமமுக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி, புதிய பாரதம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி, ஜனதா தளம் செக்யூலர் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நாளை பிரதமர் மோடி கலந்து கொள்ளும் மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com