பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த ஜான் பாண்டியன்
பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த ஜான் பாண்டியன்

எடப்பாடியை முதல்வராக்கியது யார்? – பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த ஜான் பாண்டியன்!

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் வெளியேறிய நிலையில், இரண்டாவது கட்சியாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் சிறிய கட்சிகள் பா.ஜ.க.வை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

அந்தவகையில், நேற்று த.மா.கா., பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த நிலையில், இன்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த ஜான் பாண்டியன், காங்கிரஸ் கட்சி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும், பிரதமர் மோடி செய்த சாதனைகளை இதுவரை யாரும் செய்யவில்லை என்றும் கூறினார். மேலும், பா.ஜ.க.விற்கு அ.தி.மு.க. துரோகம் செய்துவிட்டதாகவும், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க. தான் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com