விஜய் விவாகரத்து வழக்கு - நீதிபதி மாற்றம்

விஜய்- சங்கீதா
விஜய்- சங்கீதா
Published on

நடிகர் விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்துவந்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  

விஜய்- சங்கீதா வழக்கை விசாரித்துவந்த செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்ற நீதிபதி சசிகலா மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக சுஜாதா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், ஏற்கெனவே இதே பணியிடத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, இப்படியான பணியிடங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகள் மூன்று ஆண்டுகள்வரை பணியாற்றுவார்கள். பின்னரே இடமாற்றம் செய்யப்படுவார்கள்.

இந்த நிலையில் நீதிபதி சசிகலா மாற்றப்பட்டிருப்பது இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com