எழுத்தாளர் யூமாவாசுகிக்கு நடந்த அநீதி... ஒரே நாளில் தீர்வளித்து அசத்திய அமைச்சர் ராஜ்மோகன்!

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்
Published on

எழுத்தாளர் யூமா வாசுகிக்கு நடந்த அநீதியை சில மணி நேரஙகளில் வெளிநாட்டில் இருந்தே செயல்பட்டு சரி செய்துள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்.

சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும் ஓவியருமான மாரிமுத்து என்கிற யூமா வாசுகி, தஞ்சை மாவட்டம் செண்டாங்காடு அரசுப் பள்ளியில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறப்பாசிரியராகப் பணியில் சேர்ந்தார். அவர் இந்த ஜூன் முதல் ஓய்வுபெறுகிறார். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஜூன் மாதம் ஓய்வு பெற்றால் அவர்கள் அடுத்த கல்வியாண்டு வரை பணிபுரியலாம். அது அரசு விதி. அதற்கு அவர் விண்ணப்பித்தார். அதற்கு மாவட்ட கல்வி அதிகாரி மறுத்துவிட்டார். அத்துடன் அவர் மீதும் குறைகூறினார். இது குறித்து நியாயம் கோரி யூமாவாசுகி, முகநூலில் பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகனுக்குக் கடிதம் எழுதினார். இது மிகப் பரவலாக வாசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் பயணத்தில் இருக்கும் அமைச்சர் ராஜ்மோகன், அங்கிருந்தே பிறப்பித்த உத்தரவின்படி யூமா வாசுகிக்கு மறுநியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் அமைச்சருக்குப் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

அத்துடன் முகநூல் வாயிலாகவே, ”அன்பு அண்ணா, அமெரிக்காவில் இருந்தே அனைவரிடமும் பேசிவிட்டேன். நீங்கள் மீண்டும் பணியில் சேரலாம். உங்களை வரவேற்க நானும் குழந்தைகளும் காத்திருக்கிறோம்," எனப் பதிவிட்டு அனைவர் பாராட்டையும் பெற்றுள்ளார் அமைச்சர்.

ராஜ்மோகன் பதிவு
ராஜ்மோகன் பதிவு

அந்திமழை சார்பில் யூமா வாசுகியைத் தொடர்புகொண்டோம். " இன்று காலையில்தான் அந்த பதிவை முகநூலில் வெளியிட்டேன். மாலை 4 மணிக்கே எனக்கு பணி நியமன ஆணை கிடைத்துவிட்டது. பள்ளியில் சென்று பெற்றுக் கொண்டேன். ஆச்சர்யமாக இருக்கிறது. அமைச்சர் அவர்களுக்கு நன்றி," என்றார் மிக நெகிழ்வாக.

யூமா வாசுகிக்கு நியமனக் கடிதம்
யூமா வாசுகிக்கு நியமனக் கடிதம்
logo
Andhimazhai
www.andhimazhai.com