தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் "நீதி வெல்லும்!" என்று பதிவிட்டுள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த வழக்கை விசாரித்து வந்தது. அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், "நீதி வெல்லும்!" என பதிவிட்டுள்ளார்.