கலாசேத்ரா முன்னாள் ஆசிரியர் ஸ்ரீஜித்
கலாசேத்ரா முன்னாள் ஆசிரியர் ஸ்ரீஜித்

கைதானார் கலாசேத்ரா முன்னாள் ஆசிரியர் ஸ்ரீஜித்... பாலியல் புகார் வழக்கில்!

பாலினத் துன்புறுத்தல் புகாரில் விசாரிக்கப்பட்ட கலாச்சேத்ரா நிறுவனத்தின் முன்னாள் ஆசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா இன்று கைதுசெய்யப்பட்டார்.

சென்னை, திருவான்மியூரில் செயல்பட்டுவரும் இசை-நடனக் கல்வி நிறுவனமான கலாச்சேத்ராவில் பாலினச் சீண்டல்களும் துன்புறுத்தல்களும் தொடர்வதாக கடந்த ஆண்டு பிரச்னை வெடித்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட ஹரி பத்மன் என்கிற ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார். அவர் மீது வழக்கு நடந்துவருகிறது.

இந்த நிலையில், முன்னாள் மாணவி ஒருவர் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் நிலையில், அப்போதைய தன் ஆசிரியர் ஸ்ரீஜித் தன்னிடம் பாலினத் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்று புகார் அளித்திருந்தார்.

அந்த மாணவியிடம் சென்னை, அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் காணொலி மூலம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, ஸ்ரீஜித்தை இன்று காவல்துறையினர் கைதுசெய்தனர்.

அவர் இப்போது தனியாக நடனப் பள்ளி ஒன்றை நடத்திவருகிறார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com