மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்

கமல் 29ஆம் தேதி முதல் பிரச்சாரம்!

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்காக ம.நீ.ம. கட்சித் தலைவர் கமல்ஹாசன் வரும் 29ஆம் தேதி முதல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் கட்சி, இந்த முறை தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 9ஆம் தேதியன்று தி.மு.க.வுடன் மக்கள் நீதி மையம் கட்சி தேர்தல் உடன்பாடு செய்துகொண்டது. அதன்படி, இக்கட்சிக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் கூட்டணிக்காக 40 தொகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்றும் உடன்பாடு ஏற்பட்டது.

அதன்படி, ஈரோட்டில் வரும் 29ஆம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்கும் கமல், 30ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சிராப்பள்ளியிலும்,

3ஆம் தேதி சிதம்பரத்திலும், 6ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர், சென்னையிலும், மறுநாளான 7ஆம் தேதி சென்னையிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார்.

ஏப்ரல் 10ஆம் தேதி மதுரையிலும் 11ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14ஆம் தேதி திருப்பூரிலும், 15ஆம் தேதி கோயம்புத்தூரிலும்,

16ஆம் தேதி பொள்ளாச்சியிலும் கமல் பிரச்சாரம் செய்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com