கமல் ஹாசனின் மாமா சீனிவாசன்
கமல் ஹாசனின் மாமா சீனிவாசன்

92 வயதில் காலமான கமல் மாமா சீனிவாசன் - ம.நீ.ம. அலுவலகத்தில் அஞ்சலி!

நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனின் மாமா சீனிவாசன் இன்று கொடைக்கானலில் காலமானார். அவருக்கு வயது 92. 

பரமக்குடியைச் சேர்ந்த இவர், விமானப் படையில் பணியாற்றியவர். அதன்பின்னர், நீண்டகாலமாக கொடைக்கானலில் வசித்துவந்தார்.

அவரின் உடல் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையத்தின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்கு வைக்கப்படும். நாளை அவரின் உடல் தகனம் செய்யப்படும் என்றும் கமல் தெரிவித்துள்ளார். 

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், “ எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த ஆருயிர் மாமா சீனிவாசன். புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும், துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாக திகழ்ந்தவர் வாசு மாமா. இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரது உடல் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு இன்றிரவு கொண்டு வரப்படும். நாளை (23-04-24) காலை 10:30 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும். ” என்று குறிப்பிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com