"நானும் இறுமாப்புடன் சொல்கிறேன்..." - விஜய்க்கு சவால் விட்ட கனிமொழி!

DMK MP Kanimozhi
திமுக எம்.பி. கனிமொழி
Published on

''200 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என இறுமாப்புடன் சொல்கிறேன்,'' என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய்,' இறுமாப்புடன் 200 தொகுதிகளை வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடுகின்றனர். இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களுடன் இணைந்து நான் எச்சரிக்கை விடுக்கிறேன். நீங்கள் சுயநலத்திற்காக அமைத்துள்ள உங்கள் கூட்டணி கணக்குகளை 2026 சட்டசபைத் தேர்தலில் மக்களே 'மைனஸ் ' ஆக்கி விடுவர்' எனக்கூறினார். இதற்காக விஜய்யை திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, “இந்த தேர்தல் வெற்றி உங்கள் கரங்களிலே இருக்கிறது என்ற ஒரு கட்டுப்பாட்டுடன் கடமையுடன் பணியாற்றினால், வெற்றி நிச்சயம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்வது போல், 200 தொகுதிகளிலும் நிச்சயமாக நானும் சொல்கிறேன், இறுமாப்புடன் சொல்கிறேன் வெற்றி நிச்சயம். வெற்றி நிச்சயம்.” என்று பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com