விஜய் தன் கட்சிக்காரர்களுக்கு முதலில் பாடம் எடுக்கட்டும்- கனிமொழி

கனிமொழி - விஜய்
கனிமொழி - விஜய்
Published on

பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றில் முதலமைச்சர் விஜய் தன் கட்சியினருக்கு முதலில் பாடம் எடுக்கவேண்டும் என தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

”குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அப்பெண்ணை கடத்த முயன்ற கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

”காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தன் கட்சிக்காரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, முதலில் தன் கட்சியினருக்கு சுயஒழுக்கம் குறித்து பாடம் எடுக்கட்டும்.” என்று கனிமொழி தன் சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com