அரசாணை எதற்காக?- கனிமொழி கேள்வி

கனிமொழி எம்.பி.
கனிமொழி எம்.பி.
Published on

பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகம் கட்ட முதலமைச்சர் முடிவெடுக்கவில்லை என்றால், அரசாணை எதற்கு வெளியிடப்பட்டது என நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி கேட்டுள்ளார்.

புதிய தலைமைச்செயலகம் தொடர்பான அரசாணைகளையும் இணைத்து, அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

”பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் கூறுகிறார்.

அப்படியானால், 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட இந்த அரசாணை எதற்காக?

முதலமைச்சரின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரிகள் 25.55 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு, புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டார்களா?” என்று கனிமொழி கேட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com