கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் மண்டபத்தையும் இணைக்க பிரம்மாண்டமான கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இந்த பாலத்தை திறந்து வைக்கிறார்.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறை ஒன்றில், திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 1-1-2000 அன்று அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார்.
இந்த சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி இன்று முதல் மூன்று நாட்கள் தமிழக அரசு சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பாலம் இன்று திறப்புக்கு தயாராகியுள்ளது. ரூ.37 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடைபாலம் சுமார் 97 மீட்டர் நீளத்திலும், 10 அடி அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நடுப்பகுதியில் 2.4 மீட்டர் தடிமன் கொண்ட கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன.
அதிக அளவு மக்கள் நடந்து சென்றாலும் அதை தாங்கும் வகையில் இந்த கண்ணாடிகள் வலிமையாக அமைக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றம் அதிகமாக இருந்தாலும் அதை தாங்கும் வகையிலும், பலத்த காற்றில் பாதிக்கப்படாத வகையிலும் கண்ணாடி பாலம் வலிமையாக அமைக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி பாலம் வழியாக செல்வபவர்கள் கடலை ரசித்தபடி செல்லாம். இந்த பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்தப் பிறகு, இந்த பாலம் மக்கள் பயன்பாட்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.