சென்னையில் இன்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பேசுவதைப் போல செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் செய்திருந்தனர். கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரையும் இது மிகவும் கவர்ந்திழுத்தது என்பதை விவரிக்க வேண்டியதில்லை.
கருணாநிதி மறைந்த வெற்றிடத்தை அவரது பேச்சின் ரசிகர்களால் இன்னும் மறக்கமுடியவில்லை. அந்த ஏக்கத்தைப் போக்கும்வகையிலும் இந்த செ.நு. உரை அமைந்திருந்தது.
முன்வரிசையில் அமர்ந்திருந்த மு.க.ஸ்டாலினின் நாற்காலிக்கு இணையாக இன்னொரு நாற்காலி போடப்பட்டு, அதில் கருணாநிதியின் படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதற்கு நேரெதிரில் மேடையில் ஒளிக்காட்சியில் கருணாநிதி அந்த நாற்காலியில் உட்கார்ந்து பேசுவதைப்போல வடிவமைக்கப்பட்டிருந்தது.
மு.க.ஸ்டாலினைப் பாராட்டும்படியாக அந்த உரை இருந்தது.