தமிழ் நாடு
ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற நடிகர் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை எனும் கட்சி, வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலையில் கருணாஸ் சந்தித்தார். அப்போது, தங்கள் கட்சியின் ஆதரவை அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனாதனத்தை வீழ்த்த நாட்டைக் காக்க இந்தத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.