கரூர்… பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு!

கரூர்… பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு!

Published on

கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவியில் அனுமதிக்கப்பட்டிருந்த கவின்(31) என்பவர் சிகிச்சைப் பலனின்றி பலியானார். பலியான கவின், கரூர் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் என தகவல் தெரிய வந்துள்ளது.

39 பேரின் உடல்கள் சற்று முன் கூராய்வு முடிந்து ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேலும ஒருவர் பலியாகியுள்ளார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் நேற்று பலியாகினர்.

மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிசைப் பெற்று வருகின்றனர்.

இந்நிகழ்வு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சீமான் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த துயரகரமான சம்பவத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com