ரூ.25,000 கோடி என பா.ஜ.க. பரப்பும் பொய்- ஜோதிமணி எம்.பி.

ஜோதிமணி எம்.பி.
ஜோதிமணி எம்.பி.
Published on

புகழூர், வாங்கல், குப்பிச்சிபாளையம், வெஞ்சமாங்கூடலூர் மேல்பாகம், கீழ்பாகம், புங்கம்பாடி உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உரிமையுள்ள 3,084.95 ஏக்கர் நிலங்களின் பத்திரப்பதிவு தடை நீக்கப்பட்டுள்ளதில் அரசுக்கு கரூர் எம்.பி. ஜோதிமணி நன்றி தெரிவித்துள்ளார்.

”கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்றி, பாதிக்கப்பட்ட மக்களின் குரலை எடுத்துச் சென்றோம். அமைச்சர்களுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தினோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்திக்க வைத்தோம். முதலமைச்சரிடம் நேரடியாக விளக்கினோம்.

இந்த நிலங்கள் கோவில் நிலங்கள் அல்ல.

1967 இனாம் நில ஒழிப்புச் சட்டத்தின்படி ரயத்துவாரி பட்டா பெற்ற மக்களின் சொந்த நிலங்கள். நூற்றாண்டுகளாக மக்கள் விவசாயம் செய்து, வீடு கட்டி வசித்து வரும் நிலங்கள்.

சட்டவிரோதமாக விதிக்கப்பட்ட தடையால் விவசாயிகள், நடுத்தர மக்கள், ஏழை குடும்பங்கள் பெரும் அவதி அனுபவித்தனர். இப்போது நியாயமான தீர்வு கிடைத்துள்ளது.

பா.ஜ.க.வினர் பரப்பும் ’ரூ.25,000 கோடி கோவில் நிலங்களை அரசு பட்டா போட்டு கொடுத்துவிட்டது’ என்ற பொய் பிரச்சாரத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

மக்களின் உரிமையைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இதுபோன்ற பிரச்சினைகள் உள்ள பிற பகுதிகளிலும் படிப்படியாக தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த வெற்றிக்காக உழைத்த மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உட்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி.” என்று ஜோதிமணி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com