தமிழ் நாடு
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்துள்ளது.
கரூர் பெருந்துயரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.டி குழு விசாரணைக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தவெக, அரசு சார்பில் காரசார விவாதங்கள் நடந்தன.
இதை கேட்ட உச்ச நீதிமன்றம், பரஸ்பர குற்றம்சாட்டுவது முக்கியமானதல்ல… உண்மை வெளிவர வேண்டும் என்று கூறி, தமிழ்நாடு அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி வழங்கியது.