அரவிந்த் கெஜ்ரிவால், ரோஸ் நிழற்சாலை மாவட்ட நீதிமன்றம், தில்லி
அரவிந்த் கெஜ்ரிவால், ரோஸ் நிழற்சாலை மாவட்ட நீதிமன்றம், தில்லி

சிறைக்குள் படிக்க கெஜ்ரிவால் கேட்ட புத்தகம்!

அமலாக்கத் துறையால் காவலில் வைத்து  விசாரிக்கப்பட்டுவந்த தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, வரும் 15ஆம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தில்லி ரோஸ் நிழற்சாலை நீதிமன்ற சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா இன்று காலை இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். 

தில்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மாதம் 21ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டார். அமலாக்கத் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த அவரை மேலும் விசாரிக்க நீதிமன்ற அனுமதி கோரப்பட்டது. ஆனால், அதை ரோஸ் நிழற்சாலை நீதிமன்றம் ஏற்கவில்லை. கெஜ்ரிவாலை சிறையில் அடைக்கவும் அவருக்கு வேண்டிய சட்டபூர்வ வசதிகளை செய்துகொடுக்கவும் உத்தரவிட்டது. 

திகார் சிறையில் அவருக்கு ஒரு மேசை, நாற்காலியும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவும் வழிபாட்டுக்கான வசதியும் கிடைக்கும்படி செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

இதனிடையே, கெஜ்ரிவால் சிறைக்குள் தான் கொண்டுபோக வேண்டிய புத்தகங்களின் பட்டியலை தன் வழக்குரைஞர்கள் மூலமாக நீதிமன்றத்தில் வழங்கி அனுமதி கோரினார். அதில், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுடன் நீரஜா சௌத்ரி எழுதிய ஹௌ பிரைம் மினிஸ்டெர்ஸ் டிசைடு என்கிற புத்தகத்தையும் அவர் இணைத்துள்ளார்.    

logo
Andhimazhai
www.andhimazhai.com