குஷ்பு - வானதி சீனிவாசன்
குஷ்பு - வானதி சீனிவாசன்

குஷ்பு, வானதி சீனிவாசன் ஒய்யார நடை..! வைரலாகும் வீடியோ!

கோவையில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு மற்றும் வானதி சீனிவாசன் இருவரும் ஒய்யாரமாக நடந்த சென்று மாணவர்களை உற்சாகப்படுத்திய நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி வளாகத்தில் பாஜக மக்கள் சேவை மையம் சார்பாக தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நடிகை குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து நடிகை குஷ்பு மேடையில் ஒய்யாரமாக நடந்து சென்று அசத்தினார். அதன் பின்னர் அருகில் இருந்த வானதி சீனிவாசனை ‘நீங்களும் கைத்தறி ஆடையைத் தான் உடுத்தியுள்ளீர்கள். அதனால் நீங்களும் வாங்க’ என வானதியை அழைக்க, இருவரும் ஒய்யாரமாக நடக்க, ஒரு கட்டத்தில் வானதி சீனிவாசன் வெட்கத்தில் மிளிர்ந்து அனைவரையும் நோக்கிக் கும்பிட்டு விட்டு சென்றார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com