கொ.ம.தே.க. ஆலோசனை
கொ.ம.தே.க. ஆலோசனை

நாமக்கல்லில் கொ.ம.தே.க. சூரியமூர்த்தி போட்டி- சின்ராஜுக்கு வாய்ப்பு மறுப்பு!

மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் சூரியமூர்த்தி போட்டியிடுகிறார். 

இவர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்துவருகிறார். ஈரோடு மாவட்டம் திண்டலில் நடைபெற்ற கட்சியின் ஆட்சிமன்றக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மார்ச் முதல் வாரத்தில் அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பேச்சு முடிவானபோது, தற்போதைய எம்.பி. ஏ.கே.சின்ராஜுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, ஆம் இல்லையெனத் தெளிவாக பதில்கூறாமல் ஈஸ்வரன் நழுவலாக பதில்கூறினார்.

அப்போதே, வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்கும் என உறுதியாகப் பேசப்பட்டது.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com