எடப்பாடியிடம் விஜய் நேரம் கேட்கவில்லை- முனுசாமி

செய்தியாளர் சந்திப்பில் கே.பி. முனுசாமி
செய்தியாளர் சந்திப்பில் கே.பி. முனுசாமி
Published on

முதலமைச்சர் விஜய் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். 

ஒசூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார். 

முன்னதாக, நேற்று, சி.பி.எம். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்த பேட்டியில், முதலமைச்சர் விஜய் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். 

அதற்கு பதில் அளிக்கும் வகையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், ”எடப்பாடியைச் சந்திக்க அக்கட்சியின் தலைவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, இப்போது பேசவேண்டாம். சூழல் சரியாக இருக்காது எனக் கூறிவிட்டார்கள்.” என்று காரணமாகச் சொன்னார். 

அமைச்சர் அவ்வாறு கூறியது தவறு என்று முனுசாமி குறிப்பிட்டுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com