வருங்காலங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளை குறவன் குறத்தி ஆட்டம் எனப்பெயரிட்டு அழைக்கக் கூடாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
“தமிழ்நாட்டில் உள்ள பட்டியல் சாதியினர் வரிசையில் 36 ஆம் இடத்தில் குறவன் என்றும், பட்டியல் பழங்குடியினர் வரிசையில் 23 ஆம் இடத்தில் குறவர், மலைக்குறவன் என்றும் இருக்கும் பெயர்களை திரைப்படப் பாடல்களில் இழிவாகவும், கொச்சையாகவும் ஒருமையில் கிண்டல் செய்து பாடி ஆடி நடித்துள்ளதாகவும், அப்பாடல்களைக் கோவில் திருவிழா கலை நிகழ்ச்சிகளிலும் பேருந்துகளில் பாடல்களாகவும் ஒலி/ஒளி பரப்புகின்றனர் என்றும், இதனை 'டிக் டாக் 'இன்ஸ்டாக்ராம்' போன்ற இணைய வலைத்தளங்களில் கேலி கிண்டனுக்கும்; பிறரை வசைபாடுவதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டு, இதற்குச் சில திரைப்படங்களை உதாரணங்களாகக் உறியும், இதனால் அச்சமூக மாணவ, மாணவிகள் பிறரால் கேலி கிண்டலுக்கும் அவமதிப்புக்கும் மன உளைச்சலுக்கும் ஆனாகி வருவதாகத் தெரிவித்துப் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திற்கு பல்வேறு மனுக்கள் வரப்பெற்றுள்ளன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள "குறவன், மலைக்குறவன்" என்ற பெயர்கள் அப்பட்டியலில் உள்ள மக்களை அவமதிக்கும் சொற்களாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் விழாக் காலங்களிலும், பிற தருணங்களிலும் நிகழ்த்தப்படும் ஆடல்பாடல் நிகழ்ச்சிகளை, "குறவன், குறத்தி ஆட்டம்" என்ற பெயர்களில் அழைப்பதையும், அந்நிகழ்ச்சிகளின் காணொலிகளை வலைத் தளங்களில் அப்பெயர்களிலேயே பதிலிடுவதையும் ; கேலி கிண்டலுக்காகவோ, அவமதிக்கவோ, திரைப்படங்களிலும், கலையிலக்கியப் படைப்புகளிலும் பாடல்களிலும் வசனங்களிலும் அப்பெயர்களைப் பயன்படுத்துவதையும் தனிப்பட்ட நபர்களின் பெயர்களுக்கு முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ "குற" எனச் சுட்டுவதையும் தவிர்க்க வேண்டுமென்றும், காணொலிகளிலும் பிற எண்மப் (Digital) பதிவுகளிலும் "குறவன், குறத்தி ஆட்டம்" என்ற வார்த்தைகளை நீக்குமாறும் இவ்வாணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.
வருங்காலங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளை "குறவன் குறத்தி ஆட்டம்" என அழைக்கள் கூடாது என்றும், நிகழ்த்துக் கலைகளின்போது அப்பெயர்களில் அழைக்கப்படக்கூடாது என்றும் இவ்வாணையம் அறிவுறுத்துகிறது.
மகிழ்ச்சிக்காகவும் உற்சாகமூட்ட நடத்தப்படும் ஆபாசக் கலை நிகழ்ச்சிகளிலும் அப்பெயர்களைப் பயன்படுத்துவது அப்பெயர்களிலுள்ள மக்களை மிகுந்த மன வருத்தத்திற்கும், அவமானத்திற்கும் ஆளாக்குகிறது என்பதால், இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வேண்டும்.
ஏற்கனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள சண்டாளன்' என்கிற சாதிப் பெயரைத் தவறாகப் பயன்படுத்தல் கூடாது எனத் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தது போல, பட்டியல் காதி மற்றும் பட்டியல் பழங்குடி வருப்பான 'குறவன்' என்கிற சாதிப் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி ஒலி ஒளி பரப்பப்படும் பாடல்களைத் தடை செய்து அரசாணை பிறப்பிக்க தமிழ்நாடு ஆகிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையும், தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரை செய்கிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.