அமைச்சர் செஞ்சி மஸ்தான்
அமைச்சர் செஞ்சி மஸ்தான்

குவைத் தீ விபத்து: 5 தமிழர்கள் பலி! – அமைச்சர் தகவல்

குவைத் அடுக்குமாடிக் குடியிருப்பு தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செஞ்சி மஸ்தான் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, “குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக அங்குள்ள தமிழ் சங்கங்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளன.

ராமகருப்பண்ணன், வீராசாமி மாரியப்பன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, முகமது ஷெரிஃப், ரிச்சார்டு ராய் அகியோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் எங்களுக்குத் தூதரகம் மூலம் வரவில்லை. அதன் காரணமாகத்தான் நாங்களும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிடவில்லை.” என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com