திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தூணில் இன்று மாலையில் தீபம் ஏற்றப்பட்டது.
பட்டர்களுடன் உச்ச நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோரும் இத்தீபத்தை ஏற்றினர்.
தீபம் ஏற்றுவதற்காக 30 கிலோ நெய், 50 மீட்டர் நீளம் கொண்ட பருத்தி திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
கார்த்திகை தீபத்திருநாள் அன்று வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. பாதுகாப்பிற்காக சி.ஆர்.பி.எப். வீரர்கள் நேற்றிரவே திருப்பரங்குன்றம் வந்தடைந்தனர்.
ஓய்வுபெற்ற நீதிபதிகள் உட்பட்ட வழிகாட்டுதல் குழுவினர் முன்னிலையில், சி.ஆர்.பி.எப். வீரர்களின் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.