அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி - விழுப்புரம்
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி - விழுப்புரம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர கடைசித் தேதி நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பிக்க இறுதி நாள் 20.05.2024 ஆக இருந்தது 24.05.2024 ஆக நீட்டிக்கப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

”தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 06/05/2024 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள் 24/05/2024 ஆகும். 

தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டண விவரம்

விண்ணப்பக் கட்டணம் : ஒரு மாணவருக்கு : ரூ.48/-

பதிவுக் கட்டணம் : ரூ.2/-

SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை.

பதிவுக் கட்டணம் : ரூ.2/-

கட்டணம் செலுத்தும் முறை:  விண்ணப்பக் கட்டணம், பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெயரில் 06/05/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம். 

மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

தொடர்பு எண்:  044 – 24343106 / 24342911.”

logo
Andhimazhai
www.andhimazhai.com