பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

அண்ணா பல்கலைகழகம்
அண்ணா பல்கலைகழகம்
Published on

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களைச் சமர்பிக்க இன்றே (ஜுன் 5) கடைசி நாள்.

பி.இ., பி.டெக். ஆகிய இளநிலைப் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு, கடந்த மே 3ஆம் தேதி முதல் இணைய வழியாக விண்ணப்பம் பதிவுசெய்யப்பட்டு வருகிறது.

மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களைப் பதிவுசெய்து கொள்ளலாம்.

மாணவர்கள் 1800-425-0110 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்புகொண்டு சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்.

ரேண்டம் எண் ஜூன் 10-ஆம் தேதி வெளியிடப்படும்.

தரவரிசைப் பட்டியல் ஜூன் 29-ஆம் தேதி வெளியாக உள்ளது.

முதல் கட்டமாக, விளையாட்டு வீரர்களுக்கான சேர்க்கை நடத்தப்படுகிறது. அவர்களுக்கான சான்றிதழ் சரிபாரிப்பு ஜுன் 1 முதல் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com