நீட் கையெழுத்து இயக்கத்தை எதிர்த்து வழக்கு.
நீட் கையெழுத்து இயக்கத்தை எதிர்த்து வழக்கு.

நீட் கையெழுத்து இயக்கத்தை எதிர்த்து வழக்கு!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. நடத்தும் கையெழுத்து இயக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி தி.மு.க. இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. 50 நாட்களில் 50 இலட்சம் கையெழுத்துகளைப் பெறும் வகையில் இந்தக் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தக் கையெழுத்து இயக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மாணவர்களைக் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிப்பதற்கு ஏற்க மறுத்த நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, ல‌ஷ்மி நாராயணன் அமர்வு, விடுமுறை முடிந்த பின்னர், தலைமை நீதிபதி அமர்வில் முறையிடுமாறு அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com