தலைவர்களின் பிரச்சாரம் நிறைவு எங்கெங்கே?

MKStalin Edappadi Palanisami
முக ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
Published on

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைந்தது. இதையொட்டி முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெரும்பாலும் அவரவர் தொகுதி, மாவட்டங்களில் தங்கள் பிரச்சாரத்தை நிறைவுசெய்தனர். 

மார்ச் மாதம் கடைசியில் திருவாரூரில் பிரச்சாரத்தைத் தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய கொளத்தூர் தொகுதியில் பரப்புரையை முடித்தார். 

மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இன்று காலையில் தன்னுடைய பரப்புரையை நிறைவுசெய்தார்.  மற்ற அனைவருக்கும் முன்னரே ஜூலை மாதத்தில் தொடங்கி பல சுற்றுகள் தேர்தல் அறிவிப்புக்கு முன்னைய பிரச்சாரத்திலும் அவர் ஈடுபட்டிருந்தார். 

துணைமுதலமைச்சர் உதயநிதி அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கி, தன் தொகுதியான சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் இன்று நிறைவுசெய்தார். 

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் 234 தொகுதிகளிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டு, தான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் இன்று பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார். 

த.வெ.க. தலைவர் விஜய் விரல்விட்டு எண்ணும்படியான நாள்களே பரப்புரையில் ஈடுபட்டு, சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் தன் பரப்புரையை நிறைவுசெய்தார். 

மற்ற பல கட்சிகளின் தலைவர்கள் குறுகிய காலமே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com