விஜய்யுடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு!

விஜய்யுடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு!
Published on

முதலமைச்சர் விஜய்யை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் இன்று சந்தித்துப் பேசினர்.

தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மத்திய குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநில துணைச் செயலாளர்கள் என்.பெரியசாமி, ரவி, தேசியக்குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாநில உரிமை, தொழிலாளர் நலன், மக்கள் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

த.வெ.க. கூட்டணியில் தாங்கள் இடம்பெறவில்லை என்பதை இன்றும் மீண்டும் அவர்கள் தெளிவுபடுத்தினர். வெளியிலிருந்து விஜய் அரசை ஆதரிப்பதாகவும் அவர்கள் கூறினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com