சட்டப்பேரவை கூட்டம்: கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்!

கருப்பு பட்டை அணிந்திருக்கும் செங்கோட்டையன்
கருப்பு பட்டை அணிந்திருக்கும் செங்கோட்டையன்
Published on

தமிழக சட்டப்பேரவைக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து புதன்கிழமை காலை வருகை தந்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நேற்று முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை தமிழக சட்டப்பேரவைக் கூடியவுடன் கேள்வி நேரம் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், நாமக்கல் கிட்னி திருட்டு, கரூர் கூட்ட நெரிசல் பலி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கைகளில் கருப்புப் பட்டையுடன் பேரவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடனான கருத்து வேறுபாட்டால் அதிமுக கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் கருப்புப் பட்டை அணிந்திருந்தார்.

கேள்வி நேரத்தை தொடர்ந்து, 2025-2026- ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com