மயிலாடுதுறையில் சிறுத்தை வலம்... பள்ளிகளுக்கு விடுமுறை!

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்
Published on

மயிலாடுதுறையில் சிறுத்தை வலம் வந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே நேற்று இரவு 11 மணிவாக்கில் சிறுத்தை ஒன்று நடமாடியதை சிலர் பார்த்துள்ளனர். உடனே காவல்துறைக்கும் இத்தகவலைத் தெரிவித்தனர். 

வனத்துறையினருடன் அங்கு சென்ற காவல்துறையினர், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து பார்த்தனர். அதில் சிறுத்தையின் நடமாட்டம் உறுதிப்படுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, மக்கள் அதிகமாகக் கூடும் தொடர்வண்டி நிலையம், பேருந்துநிலையம் போன்ற இடங்களில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியில் வரவேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மயிலாடுதுறையில் தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 20-க்கும் மேற்பட்ட மழலையர்- தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com