ஸ்பெயினில் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் மரியாதை
ஸ்பெயினில் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் மரியாதை

ஸ்பெயினில் அண்ணாவுக்கு ஸ்டாலின் மலர் மரியாதை!

ஸ்பெயினில் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சந்திப்புகளில் ஈடுபட்டுவருகிறார்.

இன்று, முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாள் என்பதால், அங்கு அமைச்சர் ராஜா, தன் மனைவி துர்கா, அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாவின் படத்துக்கு மலர் வணக்கம் செலுத்தினார்.

மேலும், இன்று தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக - அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவுநாள். இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்! எண்ணித் துணிக கருமம்!” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com