தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய சு.வெங்கடேசன்
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய சு.வெங்கடேசன்

65% வாக்குகளை பெறுவோம் … தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய சு.வெங்கடேசன்!

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசன், பதிவாகும் வாக்கில் 65 சதவீத வாக்குகளை பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

அந்தவகையில், மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான சு.வெங்கடேசன் எம்.பி., மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் உள்ள தியாகி பாலுவின் சிலைக்கு மாலை அணிவித்துத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தியாகி பாலு சிலைக்கு மாலை அணிவித்து மதுரை மக்களவைத் தேர்தல் பணிகளைத் துவக்கினோம்.

மக்கள் அரசியலே எங்கள் அடையாளம். மாமதுரை வெல்லும்! இந்தியா வெல்லும்!” என்று பதிவிட்டுள்ளார்.

”இன்று முதல் எங்கள் தேர்தல் பணி தொடங்கியுள்ளது. மதுரையில் பதிவாகிற வாக்குகளில் 60லிருந்து 65 சதவீத வாக்குகளை பெறுவோம்.  தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார்.” என்று சு.வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com