“உங்களது இசையைப் போலவே... வாழ்த்துகள் ரஹ்மான்..!”

ஏ.ஆர். ரஹ்மான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஏ.ஆர். ரஹ்மான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் கலக்கிவரும் அவர் இன்று தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினரும், அரசியல் கட்சியினர் பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

உங்களது இசையைப் போலவே நீங்களும் என்றும் இளமையோடும் துள்ளலோடும் திகழ்ந்து, தொடர்ந்து சாதனைகளைப் படைத்திட விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com