சிறுமிகள் கும்பல் பலாத்காரம் - லாட்ஜ் மேலாளர் கைது!

உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையம்
உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையம்
Published on

திருப்பூரில் சிறுமிகள் இருவரை 9 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து வல்லுறவுக் கொடுமையில் ஈடுபட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. 

இதில் ஈடுபட்ட மூவர் சிறுவர்கள் எனும் நிலையில், அவர்கள் கோவை சிறார் கூர்நோக்கு இல்லத்திலும் மற்ற ஆறு குற்றவாளிகள் கோவை மைய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், உடுமலைப்பேட்டை சத்திரம் வீதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் மேலாளர் சாமுவேல் என்பவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 

இந்தத் தனியார் விடுதிக்கு சிறுமியை அடிக்கடி கூட்டிச்சென்று வல்லுறவுக் கொடுமைக்கு ஆளாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதையடுத்து சாமுவேல் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று திருப்பூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுகுமாரன் ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com